
1554
ஆம் ஆண்டில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ராஜாபூர் என்ற இடத்தில் ஒரு பிராமணர் தம்பதியருக்கு இவர் பிறந்தார் . அவர் பிறந்தவுடனேயே அவருடைய அன்னை இறந்தார் . தன்னுடைய மனைவியின் இழப்பை தாங்க முடியாமல் அவருடைய தந்தையும் துளசிதாசரை கைவிட்டுச் சென்றார் . அதன் பிறகு அவருடைய வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த வேலைக்காரி துளசி
தாசரை எடுத்து
வளர்த்தாள். அவளுடைய உடல்
நிலையும் பாதிக்கப்பட்டதால் துளசிதாசரின் ஐந்தாவது வயதில் வேலைக்காரியும்
மரணமடைந்தாள். அதன் பிறகு நர்ஹரி
நந்தாஜி என்ற வியாபாரி துளசி
தாசரை எடுத்து வளர்த்து படிக்க வைத்தார் . துளசி
தாசர் ஸ்வாமி ராமானந் ஆஸ்ரமத்தில் வேதங்கள் , புராணங்கள் , சாஸ்திரங்கள் ஆகியவற்றைக் கற்றுக்
கொண்டார். தீன
பந்து பாதக்
என்பவரின் மகள் ரத்னாவளியை மணந்து கொண்டார் . துளசி
தாசர் தன்னுடைய மனைவி மீது அதிகமான அன்பும் மோகமும் வைத்திருந்தார் . ஒருநாள்கூட மனைவியை விட்டுப் பிரிய மனமில்லாமல் துளசி
தாசர் அவள்மீது அப்படிப்பட்ட அன்பைப் பொழிந்தார் .
திடீரென்று ஒருநாள் ரத்னாவளி அவள் பிறந்த வீட்டிற்கு சென்றாள். மனைவியின் பிரிவைத் தாளமுடியாத துளசிதாசர் அவளுடைய வீட்டிற்குச் சென்றார். அங்கு துளசிதாசரைக் கண்டு கோபம் கொண்ட ரத்னாவளி, " இப்படி தன்னுடைய சதைப் பிண்டத்தின் மீது மோகம் கொள்வதற்கு பதிலாக பகவான் ஸ்ரீராமர் மீது மோகம் கொண்டிருந்தால் நிச்சயமாக இந்த மாதிரி நிலையிலிருந்து விடுபட்டிருப்பாய்" என்று சொன்ன வார்த்தைகள் துளசிதாசரை ஆழமாக பாதித்து அவருடைய மனக்கண்களை திறந்து வைத்தது . அன்றிலிருந்து அவர் பகவான் நாமத்தை புகழ்ந்து பல நூல்களை இயற்றினார். ராமசரித்மானஸ் , வைராக்ய சாந்தி பானி , பார்வதி மங்களம் , கவிதாவளி , கீதாவளி , ஹனுமான் பஹூக் போன்ற பிரசித்தி பெற்ற நூல்களை இயற்றி இருக்கிறார் .
No comments:
Post a Comment