Tuesday, July 6, 2010

மகரிஷி பணனி

மகரிஷி பணனி இன்டுஸ் நதிக் கரையின் மேற்கு திசையில் இடம் பெற்றுள்ள சாலத்தூர் என்ற இடத்தில் பிறந்தாரென்று வரலாறு சொல்லுகிறது . இந்த சாலத்தூர் தற்சமயத்தில் பாகிஸ்தானிலுள்ள லாகூர் என்ற இடத்தைக் குறிக்கிறது . ஏழாம் நூற்றாண்டில் சீன நாடோடியான சுயு - இன் - சாய் என்பவர் பணனியின் சிலையை லாகூரில் கண்டு வியந்தார் . அவர் அப்போதே மகரிஷி பணனியை மாபெரும் அறிவாளி என்றும் , ஞானம் பெற்றவர் என்றும் சொன்னார் . இதிலிருந்து மகரிஷி பணனி ஏழாம் நூற்றாண்டில் பிறந்திருக்கக்கூடும் என்று அனுமானிக்கப்படுகிறது . மகரிஷி
பணனியால் , பணனி பரம்பரை உருவாகிய என்றும் , பணனியின் தாயார்
தகஷி என்றும் வரலாறு சொல்லுகிறது . உலகத்திற்கு இலக்கணத்தை கற்றுத் தந்தவர் மகரிஷி பணனி என்று பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம் .

மகரிஷி வேதவியாசர்

வஷிஷ்டரின் மகனான சக்தி , சக்தியின் மகன் பராசரர் ரிஷிக்கும் மதச்யகந்தாவிர்க்கும் பிறந்தவர் வேதவியாசர் என்று இந்துப் புராணங்கள் கூறுகின்றன . வேத வியாசர் கறுப்பாக இருந்ததால் அவரை கிருஷ்ணா என்றும் , த்வாபயன் என்ற தீவில் ஜனனம் எடுத்ததால் வியாசர், கிருஷ்ண த்வாபயன் என்றும் அழைக்கப்பட்டார் . முன்காலத்தில் வேதங்களிலுள்ள பல ஸ்லோகங்கள் வெவ்வேறு இடத்திலுள்ள ரிஷிகளிடம் இருந்து வந்தன . வேத வியாசர் அனைத்து ஸ்லோகங்களையும் ஒன்றாகத் திரட்டி வேதங்களை நான்கு வகைகளாக பிரித்து அவைகளை ரிக் , யஜுர், சாம , அதர்வண வேதங்கள் என்று குறிப்பிட்டார் .

வேதவியாசர் பத்ரி என்ற காட்டிற்குள் பல வருடங்கள் தவம் புரிந்ததால் அவருக்கு பத்ராயன் என்ற பெயரும் சூட்டப்பட்டது . வேதவியாசர் சிறந்த கவிஞர் என்பதால் இவர் பக்தகாவி என்ற நூலை இயற்றினார். பிரம்ம சூத்ரம் , அத்யாத்ம ராமாயணம் , சிறப்பு மிக்க மகாபாரத காவியமும் வேத வியாசரால் எழுதப்பட்டவை என்று சொல்லலாம் .

Monday, July 5, 2010

மகரிஷி வால்மீகி

மகரிஷி கஷ்யப அதிதி தம்பதியருக்கு வருண் பிரசேதாஸ் ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார் . வருண் பிரசேதாவிர்க்கு ரத்னாகர் பத்தாவது குழந்தையாக பிறந்தார். ரத்னாகர் பிறந்தவுடன் அவருடைய தந்தை மரணமடைந்தார் . பெற்றோர்களை இழந்த ரத்னாகர் காட்டிற்கு சென்றார் . காட்டிலுள்ள பிலவர்கள் ரத்னாகரை வளர்த்தார்கள் . ரத்னாகர் வயிற்றுப் பிழைப்பிற்காக திருட ஆரம்பித்தார் . காட்டிற்குள் நுழையும் பயணிகளிடமிருந்து திருடிக் கொண்டிருந்த ரத்னாகர் அந்த வழியே சென்று கொண்டிருந்த தேவரிஷி நாரதரிடமிருந்து திருடும்போது, இந்தத் திருட்டினால் ரத்னாகருக்கு சந்தோசம் கிடைக்கிறதா என்று கேட்டார் . அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இந்தப் பாவப்பட்ட வருமானத்தினால் சந்தோசம் பெறுகிறார்களா என்று கேட்டார். நாரதரை மரத்தோடு கட்டிப் போட்டு ரத்னாகர் தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களை அழைத்து வந்தார். நாரதர் கேட்ட கேள்விக்கு அவர்கள் இந்தப் பாவச் செயலில் தங்களுக்கு எந்தவித பங்குமில்லை என்று சொன்னார்கள் . அவர்கள் சொன்ன வார்த்தை ரத்னாகரின் கண்களைத் திறந்தன . ரத்னாகர் நாரதரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் . அன்றிலிருந்து ரத்னாகர் திருட்டுத் தொழிலை விட்டுட்டு கடுந்தவம் செய்தார் . அவர் தவமிருந்த சமயத்தில் அவர் உடல் மீது எறும்புகள் புற்று வைத்து விட்டன . அதனையும் பாராட்டாமல் அவர் தியானத்தில் மூழ்கினார் .

சிறிது காலம் கழித்து தேவரிஷி நாரதர் அவ்வழியே சென்றார் . ரத்னாகரின் உடல் முழுதும் புற்றுகளால் மூடப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அவருக்கு வால்மீகி என்று பெயர் கொடுத்தார் . த்ரேதாயுக அவதாரமான ஸ்ரீராமபிரானின் வரலாற்றைச் சொன்னார் . வால்மீகி 24 ௦௦௦000 ஸ்லோகங்களைக் கொண்டு பெருமை வாய்ந்த ராமாயணத்தைப் படைத்தார் . வால்மீகி படைத்த ராமாயணம் இன்றும் மக்களால் போற்றப்பட்டு வருகிறது .

Friday, July 2, 2010

நாட்டியாசாரியார் பரத முனிவர்

த்ரேதாயுகத்தில் மக்கள் இயற்கை சீற்றத்தினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் இந்திர பகவான் பிரம்ம தேவனிடம் மக்களுடைய சந்தோஷத்திற்காக நாட்டிய சாஸ்திரத்தை படைக்கும்படி கேட்டுக் கொண்டார். பிரம்மதேவன் ரிக் வேதத்தின் பாடலையும், ஸாமவேதத்தின் ராகத்தையும், யஜுர் வேதத்தின் நடிப்புத் திறனையும், அதர்வண வேதத்தின் ரசத்தையும் ஒன்றாகப் பிணைத்து நாட்டிய சாஸ்திரத்தை இயக்கினார் . பிரம்மதேவன் பரத முனிவருக்கு நாட்டிய சாஸ்திரத்தை கொடுத்தார் . பரத முனிவர் அபினவகுப்தா சமயத்தில் வெகு சிறப்பாக நாட்டிய சாஸ்திரத்தை மக்களிடம் பரப்பினார் . பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் காளிதாசரின் காவியங்களைப் படைத்தன . பரத முனிவரால் படைக்கப்பட்ட நாட்டிய சாஸ்திரம் இயல் , இசை , நாடகம், நடிப்பு ஆகிய பாவங்களை மக்களுக்கு தெரிய வைத்தது , மக்களுடைய உணர்வுகளை தட்டி எழுப்பியது .

பகவான் பதஞ்சலி

ஏசுநாதர் பிறப்பதற்கு முன்பு சுமார் இரண்டாம் நூற்றாண்டில் பிரம்மாண்டத்தில் யோகஞானம் மறைந்து விட்டது . பகவான் பதஞ்சலி யோகத்தை பற்றி பூலோகத்திற்கு அறிய வைத்தார் . பதஞ்சலி த்வாபர யுகத்தில் அங்கிரா கோனிகா தம்பதியருக்கு மகனாக பிறந்தார் . பதஞ்சலி இருவட்டு என்ற இடத்தில் பிறந்தார் . கோனிகா தினமும் குழந்தை வரத்திற்காக செப்புச் செம்புலிருந்து இரண்டு கைகளிலும் தண்ணீர் விட்டு சூரிய நமஸ்காரம் செய்து வந்தாள். ஒருநாள் சூரிய பகவான் அவளுடைய கைகளில் குழந்தையைக் கொடுத்தார் . சூரிய பகவானால் பெற்ற அந்தக் குழந்தைக்கு கோனிகா பதஞ்சலி என்று பெயர் வைத்தாள். பதஞ்சலி குழந்தைப் பருவத்திலேயே அளவுக்கு அப்பாற்ப்பட்ட அறிவுத் திறனை பெற்றிருந்தார் . சிறுவனாக இருந்தபோது கடுமையான தவம் செய்தார் . அவருடைய தவவலிமையை கண்டு மகிழ்ந்த சிவபெருமான் பிரம்மாண்டத்திற்கு மொழிகளின் இலக்கணத்தை அறிய வைக்கும் வரத்தை அவருக்கு கொடுத்தார் . அதன் பிறகு பகவான் பதஞ்சலி கோனார்த் என்ற இடத்தில் தஞ்சமடைந்தார். பகவான் பதஞ்சலியைப் பற்றி மற்றொரு வரலாறும் சொல்லப்படுகிறது . ஆசார்பனநி இரு கைகளாலும் தண்ணீர் விட்டு சூரிய பகவானை வேண்டிக் கொண்டிருந்த சமயத்தில் தீடீரென்று அவருடைய கைகளில் பாம்புக் குட்டியை போட்டார் . அந்தப் பாம்புக்குட்டி குழந்தையாகப் பிறந்தது . அந்தக் குழந்தைக்கு பனநி , பதஞ்சலி என்று பெயர் கொடுத்து நல்ல அறிவையும் , திறமையையும் கற்றுக் கொடுத்தார் . பதஞ்சலி சுமேரு மலையிலுள்ள குகையில் லோலூபாவை சந்தித்து திருமணம் செய்து கொண்டார் . லோலூபா நல்ல அறிவாளி, இசை ஞானம் தெரிந்தவள் . பகவான் பதஞ்சலி யோக சூத்திரம் என்ற நூலை இயற்றினார் .

கபில முனிவர்

கபில முனிவர் கடவுளால் படைக்கப்பட்ட சித்த சக்தி கொண்ட முனிவர். கபில முனிவர் மகாவிஷ்ணுவின் 24 அவதாரங்களில் ஒரு அவதாரமென்றும், அதுபோல வெவ்வேறு சூழ்நிலையில் கபிலமுனிவர் அக்னியின் அவதாரமாகவும், சிவபெருமானின் அவதாரமாகவும் தோன்றியிருக்கிறார் . பிரம்ம தேவனின் நிழலில் இருந்து உருவாகிய கர்தாம் என்பவருக்கும் அவருடைய மனைவி தேவயுவதிக்கும் கபிலர் மகனாக பிறந்தார் . மகன் பிறந்ததும் கர்தாம் தம்பதியர்கள் சித்தபுர் என்ற இடத்திலுள்ள ஆசிரமத்தில் தங்கினார் . கபிலர் பிறந்ததும் பிரம்மதேவன் கர்தாமுக்கு பகவானே ஜனனம் எடுத்ததாகச் சொன்னார் . மேலும் கபில முனிவர் சமக்கிய சாஸ்திரத்தை உருவாக்குவார் என்று பிரம்மதேவன் சொல்லிவிட்டு மறைந்தார் . கபிலமுனிவர் வளர வளர அவருடைய தந்தை சந்நியாசம் பெற்றுக் கொண்டு காட்டிற்கு சென்றார் . சில நாட்கள் கழித்து காட்டிலேயே கபிலரின் தந்தை உயிர் நீத்தார் . அதன்பிறகு கபில முனிவர் தன்னுடைய அன்னையுடன் சரஸ்வதி நதிக்கரை ஓரத்தில் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு தங்கினார் . ஒருநாள் பிரம்மதேவன் தோன்றி தேவயுவதியிடம், அவளுடைய மகன் கபில முனிவர் அவளிடம் அல்லது மக்களிடம் இருக்கும் அறியாமையை அழித்து தன்னிடமிருக்கும் ஞானத்தை எடுத்துரைப்பார் என்று சொல்லிவிட்டு மறைந்தார் . பிரம்மதேவன் கூறிய படியே கபில முனிவர் தியானம் செய்தார் . தன்னுடைய ஞானத்தின் மூலம் மக்களுடைய அறியாமையை அகற்றினார். இயற்கை, ஆதமா இரண்டும் ஒரு சக்தியால் பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை மக்களக்கு உணர்த்தினார் . தன்னுடைய ஞானத்தால் சமக்கிய சாஸ்திரத்தை படைத்தார் . கபில முனிவர் தாயினுடைய அனுமதியோடு கடுந்தவம் செய்ய கங்கையை தாண்டி காட்டுப் பகுதிக்குள் நுழைந்தார் . பின்பு கபில சூத்திரம் என்ற நூலையும் இயற்றினார் .

Thursday, July 1, 2010

மகரிஷி ததீச்சர்

அதர்வ ரிஷி, சிட்டி தம்பதியருக்கு ததீச்சர் மகனாக பிறந்தார் . அகஸ்தியரின் மனைவி லோபமுத்ராவின் சகோதரி காபஸ்தினியை மணந்து கொண்டார் . மகரிஷி ததீச்சர் பிரம்ம வித்யாவை இந்திரனிடமிருந்து கற்றுக் கொண்டார் . இந்திரன் ததீச்சருக்கு பிரம்ம வித்யாவை எவருக்கும் கற்றுக் கொடுக்கக் கூடாது என்று ஆணையிட்டார் . அஸ்வினி குமாரர்கள் ததீச்சரிடம் பிரம்ம வித்யாவை கற்றுக் கொடுக்குமாறு வேண்டினார்கள் .

ஒருவர் கேட்கும் போது கற்றுக் கொண்ட வித்யாவை சொல்லித் தராமலிருப்பது அதர்மத்துக்கு துணை செல்வதென்று ததீச்சர் கருதினார் . இந்திரனுடைய ஆணையை அறிந்த அஸ்வினி குமாரர்கள் ததீச்ச்சரின் தலையை எடுத்து அவருக்கு குதிரைத் தலையை பொருந்தினார்கள். அதன் பிறகு ததீச்சர் பிரம்ம வித்யாவை அஸ்வினி குமாரர்களுக்கு கற்றுக் கொடுத்தார் .

இதை அறிந்த இந்திரன் கோபம் கொண்டு ததீச்ச்சரின் குதிரை தலையை வெட்டி எறிந்தார் . அஸ்வினி குமாரர்கள் ததீச்சருக்கு மீண்டும் அவருடைய தலையை பொருந்தினார்கள் . இதனால் ததீச்சர் அஸ்வஹீரா என்று மற்றோரு பெயரால் அழைக்கப்படுகிறார் . மகரிஷி ததீச்சர் தகஷ் மகாராஜா நடத்தும் யாகத்திற்கு மருமகன் சிவபெருமானை அழைக்கும்படி அவரிடம் கேட்டுக் கொண்டார் . தகஷானோ மகரிஷியின் வேண்டுகோளை அவமதித்ததால் ததீச்சர் யாகத்தை விட்டு வெளியேறினார் .

இந்திரனுக்கும் பிரகஸ்பதிக்கும் மனபேதம் தோன்றியது . இதனை சாதகமாக எடுத்துக் கொண்டு அசுரர்கள் தேவர்களைத் தாக்கினார்கள் . அசுரர்களுக்கு பயந்து இந்திரன் பிரம்மனிடம் அடைக்கலமடைந்தார். அந்த அராஜகத்தை ஒழிக்க பிரம்மன் தவ்ஸ்தனின் மகன் விஸ்வரூபனை பூசாரியாக தோற்றுவித்து யாகத்தை நடத்தினார் . விஸ்வரூபனின் தாயார் அசுர பரம்பரையைச் சார்ந்தவர் .

விஸ்வரூபன் யாகத்தின் பிரசாதத்தை தாயாருக்கு கொடுத்தார் . விஸ்வரூபன் கொடுத்த பிரசாதத்தை அவனுடைய தாயார் சாப்பிட்டவுடன் அசுரர்களின் பலம் கூடியது . இதை அறிந்த இந்திரன் விஸ்வரூபனை கொன்றான் . மகன் இறந்த செய்தியை அறிந்த தவ்ஸ்தன் வரத்தா என்கிற அசுரனை உருவாக்கினார் . அவனுடைய கொடுமையை தாங்க முடியாமல் இந்திரன் பிரகஸ்பதியின் உதவியை நாடினார் . பிரகஸ்பதி ததீச்சரின் எலும்பினால் உருவாக்கப்பட்ட வஜ்ராயூதத்தால் அந்த அசுரன் கொல்லப்படுவான் என்ற பரிகாரத்தை சொன்னார் .

இந்திரன் ததீச்சரைத் தேடி நைமிசாரன்யத்திற்கு சென்றார் . இந்திரன் ததீச்சரிடம் அவருடைய எலும்பை தானமாக கேட்டார் . ததீச்சரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய இந்திரன் அவருடைய எலும்பை பெற்றுக் கொண்டார் . இந்திரன் ததீச்சரின் லும்பினால் வஜ்ரா யூதத்தை உருவாக்கி வரத்தா அசுரனைக் கொன்றார் .