Friday, July 9, 2010

ஸ்வாமி விவேகானந்தர்

வாரனாசியிலுள்ள மகாதேவரின் அருளால் கொல்கத்தாவிலுள்ள விஸ்வநாத் -விஸ்வேஷ்வரி தம்பதியருக்கு 1863 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதியன்று நரேந்திரதத் என்ற பாலகன் பிறந்தார் . கல்வி, கலை , பக்தி ஆகியவற்றில் திறமையைப் பெற்ற நரேந்திரதத் படிக்கும்போது பல கேள்விகளை எழுப்பி ஆசிரியரை விந்தையில் ஆழ்த்தினார் . நரேந்திரதத் சட்டப் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார் . நரேந்திரதத் "இறைவனை பார்த்ததுண்டா ?" என்ற கேள்வியை பரமஹம்சரிடம் கேட்டார் . நரேந்திரதத் கண்களில் தெரிந்த தேஜஸானஒளியை அறிந்து கொண்ட பரமஹம்சர் அவரை தன்னுடைய சிஷ்யராக்கிக் கொண்டார் . அவரிடமிருந்து ஆன்மீக சன்மார்க்கத்தைக் கற்றுக் கொண்டார் .
செல்வம் , பெண் , பதவி ஆகியவற்றில் ஏங்குபவன் சாதாரண மனிதனாவான் . ஆனால் எவனொருவன் இறைவனுக்காக ஏங்குகிறானோ அவன் எதிரே இறைவன் தோன்றுகிறார் என்று நரேந்திரதத் கேட்ட கேள்விக்கு சற்றுகூட சலமில்லாமல் பரமஹம்சர் பதில் கொடுத்தார் . நரேந்திரனுக்கு ராம மந்திர திக்ஷதையை அளித்த பரமஹம்சரின் ஆத்மா அவருடைய உடலைவிட்டு பிரிந்து ஒளிவடிவமாக நரேந்திரதத்தின் ஆத்மாவோடு கலந்தது . அன்றிலிருந்து அவர் ஸ்வாமி விவேகானந்தா என்ற பெயரால் உலகத்திற்கு அறிமுகமானார் . உலகப் பயணத்தை மேற்கொண்ட ஸ்வாமி விவேகானந்தர் பேச்சுத் திறமையால் இந்து மதத்தின் மகிமையை எடுத்துரைத்தார் . உலக மக்களோடு ஞானம், பக்தி ஆகிய இருமார்க்கத்தின் பெருமையையும் , அருமையையும் பகிர்ந்து கொண்டார் . சர்க்கரை நோய்க்கு ஆளாகிய ஸ்வாமி விவேகானந்தர் 1902 ஆம் ஆண்டு பிப்வரி மாதத்தில்
மகாசமாதி பெற்றார் .

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்


மகாவிஷ்ணு , சிவபெருமான் ஆகிய இருவரின் அருளால் 1836 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் திகதியன்று மேற்கு வங்காளத்தில் உள்ள குமார்பூர் என்ற கிராமத்தில் குடிராம் - சந்திராமணி என்ற தம்பதியருக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் மகனாக பிறந்தார் . குழந்தைப் பருவத்தில் அவர் கதாதர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார் . கதாதர் தக் ஷினேஸ்வரில் தஞ்சமடைந்த போது ராமகிருஷ்ணர் என்ற பெயரைப் பெற்றார் .

படிப்பில் நாட்டமில்லாத ராமகிருஷ்ணர் பஜனைகள் , புராணக் கதைகள் , ஓவியம் ஆகியவற்றில் ஆர்வத்தைக் காட்டினார் . ஆறாவது வயதில் கருமேகங்களுக்கிடையே சிவபெருமான் அவருடைய கண்களுக்கு காட்சி கொடுத்ததால் அன்றிலிருந்து இறைவனை நேரில் காணவேண்டுமென்ற ஆர்வத்தால் கடுந்தவம் செய்தார் .

1843 ஆம் ஆண்டில் ராமகிருஷ்ணர் தந்தையை இழந்து மூத்த சகோதரனுடன் தக் ஷினேஸ்வரில் தஞ்சம் அடைந்தார் . அங்குள்ள பிரபலமான காளி கோயிலின் பொறுப்பை மகாராணி ரசமணி ராமகிருஷ்ணரின் மூத்த சகோதரனிடம் ஒப்படைத்தார் . ராமகிருஷ்ணரும் சகோதரனுடன் இணைந்து உதவி செய்தார் . ஒருநாள் அந்தக் கோயிலில் உள்ள கிருஷ்ணர் சிலையை வேறிடத்தில் வைப்பதற்கு தூக்கி எடுக்கும்போது கைதவறி விழுந்ததால் சிலையின் கால்கள் தனியாக பிரிந்தன . ராமகிருஷ்ணர் உடைந்த கால்களை சிலையோடு ஓட்ட வைத்து, அதே சிலையை மீண்டும் சன்னிதியில் வைத்து தானும் பூஜித்து , மக்களையும் பூஜிக்க வைத்தார் .

சில காலங்களுக்கு பிறகு அவருடைய மூத்த சகோதரனும் உயிர் நீத்தார் . அதன் பிறகு கோயில் பொறுப்புகளை மகாராணியின் மருமகன் ராமகிருஷ்ணரிடம் ஒப்படைத்தார் . காளிதேவியை நேரில் காணவேண்டுமென்று எண்ணம் கொண்ட துடிப்பில் ராமகிருஷ்ணர் ஆறு வருட காலமாக தன்னைப் பற்றி சிந்திக்காமல் எப்போதும் காளிதேவியையே ஸ்மரணம் செய்து கொண்டிருந்தார் . ஒருநாள் கோபம் கொண்டு ராமகிருஷ்ணர் தன்னுடைய உயிரை நீத்துக் கொள்வதற்கு முயற்சித்த போது காளிதேவி அவர் எதிரே தோன்றினாள். அவருடைய பக்தியில் பரவசமடைந்து தேவி அருள் கொடுத்து மறைந்தாள். 23 ஆம் வயதில் ராமகிருஷ்ணருக்கு ஸ்ரத்தாமணி என்பவருடன் திருமணம் நடை பெற்றது. திருமணத்திற்கு பிறகும் ராமகிருஷ்ணர் பக்தி, ஆன்மீக மார்கத்தில் தீவிரமடைந்தார் .

பைரவி பிரம்மணி என்ற குருமாதாவிடம் சேர்ந்த ராமகிருஷ்ணர் குண்டலினி , அஷ்டசித்தி , தாந்திரகம் ஆகியவற்றை கற்றுக் கொண்டார் . வைணவம் , சைவம் ஆகிய இரு சம்பிரதாயங்களிலும் தேர்ச்சி பெற்ற ராமகிருஷ்ண பரமஹம்சர் தனக்குள்ளிருக்கும் பரமாத்மாவை கண்டு மகிழ்ந்தார் . அனுமன் முதன் முறையாக சீதாவை கண்ட அனுபவத்தை ராமகிருஷ்ணர் உணர்ந்தார் . தனக்குள் இருக்கும் பரமாத்மாவே இறைவன் என்ற உண்மையை அறிந்து கொண்ட ராமகிருஷ்ணர் இந்த அற்புதமான அனுபவத்தை மக்களோடு பகிந்து கொண்டார் . தன்னுடைய சிஷ்யனான நரேந்திரதத் என்பவருக்கு தன்னிடமிருக்கும் சக்தியை ஒப்படைத்து விட்டு 1886 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16 ஆம் திகதியன்று ஒளிவடிவமாக நரேந்திர ஆன்மாவோடு கலந்தார் . அன்றிலிருந்து நரேந்திரதத் என்ற இளைஞர் விவேகானந்தர் என்ற பெயரால் உலகத்திற்கு அறிமுகமானார் . பரமஹம்சர் புகழ்பெற்ற ராமகிருஷ்ண உபநிஷதங்கள் என்ற நூலை இயற்றிய பெருமையைப் பெற்றார் .

Wednesday, July 7, 2010

மகரிஷி தயானந்த சரஸ்வதி


இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளிலும் இறைவனைக் காணலாம் என்ற தத்துவத்தை உணர்த்திய மகரிஷி தயானந்த சரஸ்வதி, 1824 ஆம் ஆண்டில் சௌராஷ்டிரா மாநிலத்திலுள்ள டன்காரா என்ற கிராமத்தில் கர்சன் -தார்வாடி என்ற தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் . பெற்றோர்கள் அவரை மூலசங்கரர் என்ற பெயரால் அழைத்தார் .

பிராமணக் குடும்பத்தைச் சார்ந்த மூலசங்கரரின் தந்தை பரம சிவபக்தி கொண்டவர் . குழந்தைப் பருவத்தை அதிகபட்சமாக இல்லத்தில் கழித்த மூலசங்கரருக்கு 21 ஆம் வயதில் திருமணம் நிச்சியக்கப்பட்டது . ஆனால் குடும்ப வாழ்க்கையை வெறுத்து ஒதுக்கிய மூலசங்கரர் திருமணம் அன்று வீட்டை விட்டு வெளியேறினார் . தன்னுடைய இரண்டாவது வாழ்க்கைக் காலகட்டத்தில், ஸ்வாமி நாராயண பிரம்மச்சாரி என்பவரால் நடத்தி வந்த ஆசிரமத்தில் சிஷ்யனாக சேர்ந்தார் . அங்கு புரானந்த சரஸ்வதி என்ற குருவிடம் வாழ்க்கையின் யதார்த்தத்தை கற்றுக் கொண்டார் . அதிவேகமாக கிரகித்துக் கொள்ளும் திறனைப் பெற்ற மூலசங்கரரின் இந்த ஆற்றலை அறிந்து கொண்ட அவருடைய குரு அன்றிலிருந்து ஆசிரமத்தில் அவரை தயானந்த் சரஸ்வதி என்ற பெயரால் அழைத்தார் .

ஸ்வாமி விராஜ்நந்த குருவிடம் வேதங்களைக் கற்றுக் கொண்ட மகரிஷி தயாநந்த சரஸ்வதி காசிக்குச் சென்று வேதாங்கம் கல்வியிலும் தேர்ச்சி பெற்றார். சமஸ்கிருதம் , ஹிந்தி , குஜராத்தி மொழிகளில் பேச்சுத் திறனைப் பெற்ற மகரிஷி தான் பெற்ற பக்தி மார்க்கத்தை மக்களோடு பகிர்ந்து கொண்டார் . தன்னுடைய வாழ்க்கையின் மூன்றாவது காலகட்டத்தில், அவர் கற்றுக் கொண்ட கல்வியையும், ஞானத்தையும் போதிக்கத் தொடங்கினார் . அந்தச் சமயத்தில் மக்களுடைய பொதுநலனை மனதில் வைத்துக் கொண்டு ஆரிய சமாஜதத்தைத் துவக்கினார் .

முற்போக்கான எண்ணங்களைக் கொண்ட மகரிஷி தயானந்த் சரஸ்வதி, ஜோத்பூர் அரசரால் பல இன்னல்களைச் சந்தித்தார் . ஆனால் இடையூறுகளை சமாளித்தவண்ணம் மகரிஷி மனோதிடத்துடன் தன்னுடைய எண்ணங்களைப் பரப்புவதில் செயல்பட்டார் . 1883ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் திகதியன்று மகரிஷி தயானந்த் சரஸ்வதி காயத்ரி மந்திரத்தை ஜபித்த வண்ணம் சமாதி பெற்றார் . மகரிஷி வேதபாஷ்யா , பாஷ்ய பூமிகா , சத்யார்த்த பிரகாஷ் ஆகிய நூல்களை இயற்றிய பெருமையைப் பெற்றார் .

மீராபாய்

ராஜ பரம்பரையில் பிறந்த மீரா தன்னுடைய குழந்தைப் பருவத்தில் தாயை இழந்தாள். அதன் பிறகு தாத்தாவின் அரவணைப்பில் மீரா வளர்ந்தாள். சின்னப் பருவத்தில் தாத்தா அவளுக்கு கிருஷ்ணரின் புகழ் பாட்டை ஊட்டி வளர்த்ததால், அவள் கிருஷ்ண பரமாத்மாவை அதிகமாக நேசிக்கத் தொடங்கினாள். சித்தூரை ஆண்ட மகாராஜா போஜ்ராஜ் என்பவருக்கு மீராவை கட்டிக் கொடுத்தார் . தன்னுடைய கணவரை விட அதிகமாக நேசித்த கிருஷ்ண பரமாத்மாவை மீரா கணவராகப் பாவிக்கத் தொடங்கினாள். ஆறு வருடங்கள் கழித்து அவளுடைய கணவர் மரணமடைந்தார் . அதன் பிறகு அவருடைய சகோதரன் விக்கிரமாதித்யன் சித்தூரை ஆண்டான் . ராஜ பரம்பரையைச் சேர்ந்த மீரா சாதுக்களுடன் பகவான் நாமத்தை பாடி , ஆடிக் கொண்டிருப்பதை விரும்பாத விக்கிரமாதித்யன், அவளைத் தீர்த்துக்கட்ட பாலில் விஷத்தைக் கலந்து கொடுத்து, அதனை கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்த சரணாம்ருதம் என்று பொய் சொல்லிக் கொடுத்தான் . மீரா அந்தப் பாலை அருந்தும் போது அதனுள்ளே இருந்த விஷம் அமிர்தமாக மாறி அவளை ஒன்றும் செய்யாமலிருந்தது .

இன்னொரு முறை நல்ல பாம்பை வைத்துள்ள கூடையில் பூமாலையும், சாளக்கிராமமும் இருப்பதாகச் சொல்லி அவளுடைய அறையில் வைத்தான் . மீரா குளித்துவிட்டு அந்தக் கூடையை திறந்து பார்த்தபோது உண்மையாகவே அந்தக் கூடையில் ஒரு பூமாலையும் , சாளக்கிராமமும் இருந்தன . இத்தகைய தொல்லைகளைக் கொடுத்த விகிரமாதித்யனை விட்டு மீரா பிறந்த வீட்டிற்குச் சென்றார் . பிறகு மீரா பிருந்தாவனம் சென்றார் . அங்கு மீராஜீவ்கோஸ்வாமியை சந்தித்தார் . அங்கிருந்து த்வாரகை சென்றார் . மீரா கிருஷ்ணரை புகழ்ந்து பல பாடல்களைப் பாடினார் . அப்படி பாடிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று மீரா துவாரகையில் உள்ள கிருஷ்ணனோடு கலந்தாள். கிருஷ்ணரையே கணவராக எண்ணிய மீராவின் வாழ்க்கைச் சரித்திரம் என்றும் நம்முடைய மனத்தில் ஆழமாக பதிந்திருக்கிறது என்று சொல்லலாம் .

துளசிதாசர்

1554ஆம் ஆண்டில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ராஜாபூர் என்ற இடத்தில் ஒரு பிராமணர் தம்பதியருக்கு இவர் பிறந்தார் . அவர் பிறந்தவுடனேயே அவருடைய அன்னை இறந்தார் . தன்னுடைய மனைவியின் இழப்பை தாங்க முடியாமல் அவருடைய தந்தையும் துளசிதாசரை கைவிட்டுச் சென்றார் . அதன் பிறகு அவருடைய வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த வேலைக்காரி துளசிதாசரை எடுத்து வளர்த்தாள். அவளுடைய உடல் நிலையும் பாதிக்கப்பட்டதால் துளசிதாசரின் ஐந்தாவது வயதில் வேலைக்காரியும் மரணமடைந்தாள். அதன் பிறகு நர்ஹரிநந்தாஜி என்ற வியாபாரி துளசிதாசரை எடுத்து வளர்த்து படிக்க வைத்தார் . துளசிதாசர் ஸ்வாமி ராமானந் ஆஸ்ரமத்தில் வேதங்கள் , புராணங்கள் , சாஸ்திரங்கள் ஆகியவற்றைக் கற்றுக் கொண்டார். தீனபந்து பாதக் என்பவரின் மகள் ரத்னாவளியை மணந்து கொண்டார் . துளசிதாசர் தன்னுடைய மனைவி மீது அதிகமான அன்பும் மோகமும் வைத்திருந்தார் . ஒருநாள்கூட மனைவியை விட்டுப் பிரிய மனமில்லாமல் துளசிதாசர் அவள்மீது அப்படிப்பட்ட அன்பைப் பொழிந்தார் .

திடீரென்று ஒருநாள் ரத்னாவளி அவள் பிறந்த வீட்டிற்கு சென்றாள். மனைவியின் பிரிவைத் தாளமுடியாத துளசிதாசர் அவளுடைய வீட்டிற்குச் சென்றார். அங்கு துளசிதாசரைக் கண்டு கோபம் கொண்ட ரத்னாவளி, " இப்படி தன்னுடைய சதைப் பிண்டத்தின் மீது மோகம் கொள்வதற்கு பதிலாக பகவான் ஸ்ரீராமர் மீது மோகம் கொண்டிருந்தால் நிச்சயமாக இந்த மாதிரி நிலையிலிருந்து விடுபட்டிருப்பாய்" என்று சொன்ன வார்த்தைகள் துளசிதாசரை ஆழமாக பாதித்து அவருடைய மனக்கண்களை திறந்து வைத்தது . அன்றிலிருந்து அவர் பகவான் நாமத்தை புகழ்ந்து பல நூல்களை இயற்றினார். ராமசரித்மானஸ் , வைராக்ய சாந்தி பானி , பார்வதி மங்களம் , கவிதாவளி , கீதாவளி , ஹனுமான் பஹூக் போன்ற பிரசித்தி பெற்ற நூல்களை இயற்றி இருக்கிறார் .

Tuesday, July 6, 2010

சைதன்ய மகாபிரபு

1486 ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்தில் உள்ள நவதீப் என்ற இடத்தில் சைதன்ய மகாபிரபு பிறந்தார் . ஆன்மீகவாதியான ஜகன்நாத் மிஸ்ரா - சாக் ஷி தேவிக்கு மகனாக பிறந்தார் . சைதன்யாவின் முதல் சகோதரர் விஸ்வரூப் சன்யாசம் வாங்கிக் கொண்டார் . சைதன்ய மகாபிரபு குழந்தைப் பருவத்தில் விச்வாம்பர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார் . அவரை மக்கள் செல்லமாக நிமாய் என்றும் அழைத்தார்கள் .

குழந்தைப் பருவத்தில் அவர் படிப்பில் மிகவும் புத்திசாலியாக இருந்தார். அவர் 12 வது வயதில் சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றார் . அப்போது தான் அவருடைய தந்தை மரணம் அடை ந்தார். அதன் பிறகு அவர் பண்டித் வல்லபாசாராவிடம் வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களைக் கற்றுக் கொண்டார் . அந்தச் சமயத்தில் தன்னுடைய குருவின் மகளான லக்ஷ்மியை மணந்து கொண்டார் . சைதன்ய மகாபிரபு தன்னுடைய வயிற்றுப் பிழைப்பிற்காக ஒரு சம்ஸ்கிருத பாடசாலையைத் தொடங்கினார் . அந்தப் பாடசாலை நாளடைவில் வளர்ச்சி பெற்றதால் சைதன்யா அந்தப் பாடசாலை மீது முழு கவனத்தை செலுத்தினார் . குடும்பத்தின் மீது அக்கறை எடுத்துக் கொள்ளாததால் அவருடைய மனைவி லக்ஷ்மி திடீரென்று மரணமடைந்தார் .

தன்னுடைய அன்னையின் வற்புறுத்தலால் மீண்டும் சைதன்யா விஷ்ணுப்ரியா என்பவரை மணந்து கொண்டார் . ஒரு சமயம் சைதன்யா காயா சென்ற போது மாபெரும் தபஸ்வியை சந்தித்தார். அவரிடமிருந்து மந்திரங்களைக் கற்று கொண்டார் . இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது சைதன்யாவிடம் மாற்றங்கள் தோன்றின . அவர் நீண்ட நேரம் தியானம் செய்யத் தொடங்கினார் .

சைதன்யா அனுதினமும் கிருஷ்ண பரமாத்மாவை நினைத்து , அவர்மீது மோகம் கொண்டு பக்தி கானங்கள் பாடினார் . 1510 ஆம் ஆண்டில் சைதன்யா சந்நியாசம் எடுத்துக் கொண்டார் . பதினெட்டு வருடங்களுக்கு சைதன்யா ஜகன்நாத்பூரியில் தஞ்சமடைந்தார் . ஒரு நாள் ஜகன்நாதர் சின்ன மூர்த்தியை அரவணைத்துக் கொண்டிருந்த போது அவருடைய ஆத்மா பிரிந்து , அந்தச் சின்ன மூர்த்தியோடு கலந்தது . ராதா - கிருஷ்ண மீது பல பாடல்களை இயற்றிய சைதன்ய மகாபிரபு என்றும் நம்முடைய நினைவில் இருந்துகொண்டே இருக்கிறார் .

குருநானக்

காலுவேதி - த்ருப்தாஜி தம்பதியருக்கு கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியன்று தல்வந்தி கிராமத்தில் குருநானக் பிறந்தார் . குழந்தைப் பருவத்திலே குருநானக் அதிக நேரம் தியானத்தில் மூழ்கினார் . அந்தச் சின்ன வயதிலேயே குருநானக் பஜனைகளை நிகழ்த்தினார். ஏழை , எளியவர்களுக்கு தன்னிடமிருந்ததை கொடுத்து உதவினார் . கிராமத்துப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது அவர் வேதங்களிலும் , புராணங்களிலும் ஆர்வத்தைக் காட்டினார் . பண்டித் பிரிஜ்நாத் என்பவரின் மூலம் வேத சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்டார். அந்தச் சின்ன வயதிலே மக்களின் நலத்தில் ஆர்வம் காட்டிய குருநானக் தனக்காக எதையும் யோசிக்காமல் மக்களுக்காகவே உழைத்தார் . குருநானக் மூல்சந்த் என்பவரின் மகளான சுலாகினியை மணந்து கொண்டார் .
ஒரு சமயம் குருநானக் "வை " என்ற நதியில் நீராடிக் கொண்டிருந்தபோது திடீரென்று புதிய அனுபவம் அவருக்குள்ளே ஏற்பட்டது . அன்றிலிருந்து மூன்று நாட்கள் அவர் காணாமல் போனார் . அதன் பிறகு தோன்றிய போது அவருடைய முகத்தில் திவ்ய ஒளி ஒன்று தென்பட்டது . அவருக்குள்ளே ஒருவித ஆன்மீக சக்தியொன்று பிறந்தது . குருநானக் எந்நேரமும் பகவானின் நாமத்தை அதாவது நாமஸ்மரன் உச்சரித்து கொண்டிருந்தார் . குருநானக் இந்த நாமஸ்மரனை மக்களிடம் பரப்பினார் . குருநானக் முப்பது வயதில் பல இடங்களுக்குப் பயணம் செய்தார் . மக்களுடைய மூடநம்பிக்கையை அகற்றி குருநானக் அவர்களுக்கு நல்ல விஷயங்களைப் போதித்தார் . ஜாதி , மத பேதமற்ற சமூகத்தை உருவாக்க முயன்றார் . 1539 ஆம் ஆண்டில் குருநானக் ஆத்மா ஸ்வரூபமாக தன்னுடைய வேலைக்காரன் உடலுக்குள் ஐக்கியமானார். அவனுடைய உடலில் இருந்து ஓர் ஒளியாக மாறி வானத்தில் மறைந்தார் . குருநானக் மறையும் தருணத்தில் ஓம் சத்யஸ்ரீ அகால் என்ற புனித நூலை சொல்லிக் கொண்டே மறைந்தார் . சீக்கியர்களின் மத குருவான குருநானக் "குரு கிரந்த் சாஹிப் " என்ற நூலை இயற்றினார். இன்றும் சீக்கியர்கள் இந்த கிரந்தத்தை கடவுளாக எண்ணி வணங்குகிறார்கள் .

சாது கபீர்

ஸ்வாமி ராமானந்தின் அருளால் காசியில் வசித்துக் கொண்டிருந்த ஒரு பிராமண விதவை 14 56 ஆம் ஆண்டில் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் . சமூகத்திற்கு பயந்து அந்தச் சின்னக் குழந்தையை லஹர் என்ற ஏரிக்கரையில் விட்டுவிட்டாள். அந்த வழியாக சென்று கொண்டிருந்த நெசவுத் தொழில் செய்யும் முஸ்லிம் தம்பதியர்கள் அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தார்கள் . நீரு - நீமா என்ற முஸ்லிம் தம்பதியர்கள் அந்தக் குழந்தைக்கு கபீர் என்று பெயர் சூட்டினார்கள் . முஸ்லிமாக இருந்தாலும் கபீர் தன்னுடைய சின்ன வயதிலே நெற்றியில் திலகத்தை இட்டுக் கொண்டு பகவான் ஸ்ரீராமரின் நாமத்தைப் பாடிப் பரவசமானார் . சின்ன வயதிலேயே பகவானைப் பற்றி உரையாடல்கள் நிகழ்த்தினார். ஸ்ரீராமரின் வரலாற்றுப் பெருமையை பஜனை வடிவமாக பாடி மகிழ்ந்தார் .

கபீர் தன்னுடைய குருவான ஸ்வாமி ராமானந்துக்கு சிலை எழுப்பினார் . கபீர் பாகந்த் வைராகி என்பவற்றின் மகளான லோணியை மணந்து கொண்டார் . லோனி பார்ப்பதற்கு அழகாகவும், விவேகம் நிறைந்தவளவாகவும் தோன்றினாள். இந்த தம்பதியர் கமால் என்ற ஆண் குழந்தையையும் , கமாலி என்ற பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்கள் . 1505 ஆம் ஆண்டில் காசியில் கபீர் மோட்ச பிராப்தி அடைந்தார் . அவருடைய சவத்தை இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் எரிக்க ஆசைப்பட்டார்கள் . ஆனால் முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர்கள் அவருடைய சவத்தைப் புதைக்க விரும்பினார்கள் . திடீரென்று அப்போது காற்று வீசியதால் அவருடைய சவத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த போர்வை விலகியதால் அங்கு சவத்திற்கு பதிலாக பூக்கள் கிடந்ததை பார்த்து இரு மதத்தினர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கினார்கள் . இந்துக்கள் ஒரு பாதி பூக்களை காசியில் சாஸ்திரங்கள் முறைப்படி ஈமக்கடன்களைச் செய்தார்கள் . அதுபோல முஸ்லிம்கள் மற்ற பாதி பூக்களைப் புதைத்தார்கள். கபீர் படிக்காதவராக இருந்தாலும் பல நூல்களை இயற்றினார் . ஆதிகிரந்தம் , பிரம்ம நிருபன் , ஷப்தாவளி போன்ற புகழ் பெற்ற நூல்களை இயற்றினார்.

மகாகவி காளிதாசர்

உலகத்திலேயே தலைசிறந்த கவிஞர் என்று காளிதாசரை குறிப்பிடலாம் . இந்த மாபெரும் கவிஞரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி எந்தப் புத்தகத்திலும் சரியாக எழுதப்படவில்லை . ஒருசில புராணங்கள் காளிதாசர் குழந்தைப் பருவத்தில் முட்டாளாகவும், காளிதேவியின் மீது அளவில்லா அன்பு வைத்திருந்ததால், தேவியின் அருள் பெற்று மாபெரும் கவிஞரானார் என்று சொல்கிறது . அதன்பிறகு காளிதாசர் இலக்கியம், தத்துவம் , ஆயுர்வேதம் , இதிகாசம் , புராணங்கள் , ஜோதிடம் , பூகோளம் எல்லாவற்றையும் படித்து அறிவாளியானார். காளிதாசர் வடஇந்தியா முழுதும் சுற்றினார் . காளிதாசர் ஏசுநாதர் பிறப்பதற்கு முன்பு 150 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருப்பார் என்று ஒருசில வரலாறு குறிப்பிடுகிறது .

மால்விகாமித்ரா, விக்ரமவர்ஷியம், அபிக்யான் சாகுந்தலம் , குமாரசம்பவம், ரகுவம்சம், மேகதூதம், ருதுசம்ஹாரம் ஆகிய காவியங்களையும் காளிதாசர் இயற்றினார்.

ஆசார்யா சாணக்கியர்

வால்மீகி , வேதவியாசர் ஞானிகளுக்கு பிறகு சாணக்கியரையும் ஞானி என்று வரலாறு குறிப்பிடுகிறது . சாணக்கியர், சிவப்பு கண்களும், கறுப்பு நிறமும் , விகாரமான தோற்றத்தைக் கொண்டவர் என்று சொல்லலாம் . சாணக்கியரின் உண்மையான பெயர் விஷ்ணுகுப்தா என்றும், அவர் சனகா என்ற பிராமணனுக்கு பிறந்ததால் சாணக்கியர் என்று அழைக்கப்பட்டார் . ஆசார்யா சாணக்கியர் ஏசுநாதர் பிறப்பதற்கு முன்னால் பிறந்தாரென்று வரலாறு சொல்லுகிறது . சாணக்கியர் வேதங்கள், கணிதம் , ஆயுர்வேதம் , யுத்தகலை எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினார் . சாணக்கியரை தலைசிறந்த அறிவாளி என்றும் , அடிக்கடி கோபம் கொள்பவர் என்றும் , தைரியசாலி என்றும் , திறமையான நிர்வாகி என்றும் சொல்லலாம் .

முன்பு மகத நாட்டை நந்த பரம்பரையினர் ஆண்டு வந்தார்கள் . கீழ்சாதியான நந்த பரம்பரையினர் பிராமணர்களை இழுவுப்படுத்தினார்கள் . அப்போது ஆண்டு வந்த தன்நந்து என்ற அரசன் சாணக்கியரை தன்னுடைய தர்பாரில் அழைத்து அவமானப்படுத்தியது மட்டுமில்லாமல் , அவரை சிறைவாசம் வைத்தான் . அவனுடைய கொடுமைகளைத் தாள முடியாமல் அவனை ஒழித்து அதே அரச தர்பாரில் இன்னொருவரை உட்கார வைக்க வேண்டுமென்று கங்கணம் செய்து கொண்டு தன்னுடைய முடியை முடித்து வைத்துக் கொண்டார் . அப்போதுதான் சாணக்கியர் சந்திரகுப்தாவை சந்தித்தார் . சந்திரகுப்தாவின் உதவியால் நந்த பரம்பரையின் அரசனான தன்நந்துவை அழித்து , சந்திரகுப்தாவிடம் ராஜதர்பாரை ஒப்படைத்தார் . நந்த பரம்பரையை விரட்டி அடித்து மௌர்யா பரம்பரையை உருவாக்கினார் . சாணக்கியர் சந்திரகுப்தாவின் சிறந்த அறிவுரையாளராகவும், நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டார் .

சாணக்கியரின் உதவியால் சந்திரகுப்த மௌர்யா அந்த நாட்டை 24 வருடங்கள் ஆண்டார் . சாணக்கியர் புகழ் பெற்ற அர்த்தசாஸ்திரம் என்ற தத்துவத்தை உருவாக்கினார் . மேலும் ஜோதிடத்தில் விஷ்ணுகுப்த சித்தாந்தத்தையும், ஆயுர்வேதத்தில் வைத்தியஜீவன் என்ற புத்தகத்தை எழுதினார் . சந்திரகுப்த காலத்திற்கு பிறகு சாணக்கியர் சந்நியாசத்தைக் கைப்பற்றினார் என்று தெரிய வருகிறது .

மகரிஷி பணனி

மகரிஷி பணனி இன்டுஸ் நதிக் கரையின் மேற்கு திசையில் இடம் பெற்றுள்ள சாலத்தூர் என்ற இடத்தில் பிறந்தாரென்று வரலாறு சொல்லுகிறது . இந்த சாலத்தூர் தற்சமயத்தில் பாகிஸ்தானிலுள்ள லாகூர் என்ற இடத்தைக் குறிக்கிறது . ஏழாம் நூற்றாண்டில் சீன நாடோடியான சுயு - இன் - சாய் என்பவர் பணனியின் சிலையை லாகூரில் கண்டு வியந்தார் . அவர் அப்போதே மகரிஷி பணனியை மாபெரும் அறிவாளி என்றும் , ஞானம் பெற்றவர் என்றும் சொன்னார் . இதிலிருந்து மகரிஷி பணனி ஏழாம் நூற்றாண்டில் பிறந்திருக்கக்கூடும் என்று அனுமானிக்கப்படுகிறது . மகரிஷி
பணனியால் , பணனி பரம்பரை உருவாகிய என்றும் , பணனியின் தாயார்
தகஷி என்றும் வரலாறு சொல்லுகிறது . உலகத்திற்கு இலக்கணத்தை கற்றுத் தந்தவர் மகரிஷி பணனி என்று பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம் .

மகரிஷி வேதவியாசர்

வஷிஷ்டரின் மகனான சக்தி , சக்தியின் மகன் பராசரர் ரிஷிக்கும் மதச்யகந்தாவிர்க்கும் பிறந்தவர் வேதவியாசர் என்று இந்துப் புராணங்கள் கூறுகின்றன . வேத வியாசர் கறுப்பாக இருந்ததால் அவரை கிருஷ்ணா என்றும் , த்வாபயன் என்ற தீவில் ஜனனம் எடுத்ததால் வியாசர், கிருஷ்ண த்வாபயன் என்றும் அழைக்கப்பட்டார் . முன்காலத்தில் வேதங்களிலுள்ள பல ஸ்லோகங்கள் வெவ்வேறு இடத்திலுள்ள ரிஷிகளிடம் இருந்து வந்தன . வேத வியாசர் அனைத்து ஸ்லோகங்களையும் ஒன்றாகத் திரட்டி வேதங்களை நான்கு வகைகளாக பிரித்து அவைகளை ரிக் , யஜுர், சாம , அதர்வண வேதங்கள் என்று குறிப்பிட்டார் .

வேதவியாசர் பத்ரி என்ற காட்டிற்குள் பல வருடங்கள் தவம் புரிந்ததால் அவருக்கு பத்ராயன் என்ற பெயரும் சூட்டப்பட்டது . வேதவியாசர் சிறந்த கவிஞர் என்பதால் இவர் பக்தகாவி என்ற நூலை இயற்றினார். பிரம்ம சூத்ரம் , அத்யாத்ம ராமாயணம் , சிறப்பு மிக்க மகாபாரத காவியமும் வேத வியாசரால் எழுதப்பட்டவை என்று சொல்லலாம் .

Monday, July 5, 2010

மகரிஷி வால்மீகி

மகரிஷி கஷ்யப அதிதி தம்பதியருக்கு வருண் பிரசேதாஸ் ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார் . வருண் பிரசேதாவிர்க்கு ரத்னாகர் பத்தாவது குழந்தையாக பிறந்தார். ரத்னாகர் பிறந்தவுடன் அவருடைய தந்தை மரணமடைந்தார் . பெற்றோர்களை இழந்த ரத்னாகர் காட்டிற்கு சென்றார் . காட்டிலுள்ள பிலவர்கள் ரத்னாகரை வளர்த்தார்கள் . ரத்னாகர் வயிற்றுப் பிழைப்பிற்காக திருட ஆரம்பித்தார் . காட்டிற்குள் நுழையும் பயணிகளிடமிருந்து திருடிக் கொண்டிருந்த ரத்னாகர் அந்த வழியே சென்று கொண்டிருந்த தேவரிஷி நாரதரிடமிருந்து திருடும்போது, இந்தத் திருட்டினால் ரத்னாகருக்கு சந்தோசம் கிடைக்கிறதா என்று கேட்டார் . அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இந்தப் பாவப்பட்ட வருமானத்தினால் சந்தோசம் பெறுகிறார்களா என்று கேட்டார். நாரதரை மரத்தோடு கட்டிப் போட்டு ரத்னாகர் தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களை அழைத்து வந்தார். நாரதர் கேட்ட கேள்விக்கு அவர்கள் இந்தப் பாவச் செயலில் தங்களுக்கு எந்தவித பங்குமில்லை என்று சொன்னார்கள் . அவர்கள் சொன்ன வார்த்தை ரத்னாகரின் கண்களைத் திறந்தன . ரத்னாகர் நாரதரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் . அன்றிலிருந்து ரத்னாகர் திருட்டுத் தொழிலை விட்டுட்டு கடுந்தவம் செய்தார் . அவர் தவமிருந்த சமயத்தில் அவர் உடல் மீது எறும்புகள் புற்று வைத்து விட்டன . அதனையும் பாராட்டாமல் அவர் தியானத்தில் மூழ்கினார் .

சிறிது காலம் கழித்து தேவரிஷி நாரதர் அவ்வழியே சென்றார் . ரத்னாகரின் உடல் முழுதும் புற்றுகளால் மூடப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அவருக்கு வால்மீகி என்று பெயர் கொடுத்தார் . த்ரேதாயுக அவதாரமான ஸ்ரீராமபிரானின் வரலாற்றைச் சொன்னார் . வால்மீகி 24 ௦௦௦000 ஸ்லோகங்களைக் கொண்டு பெருமை வாய்ந்த ராமாயணத்தைப் படைத்தார் . வால்மீகி படைத்த ராமாயணம் இன்றும் மக்களால் போற்றப்பட்டு வருகிறது .

Friday, July 2, 2010

நாட்டியாசாரியார் பரத முனிவர்

த்ரேதாயுகத்தில் மக்கள் இயற்கை சீற்றத்தினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் இந்திர பகவான் பிரம்ம தேவனிடம் மக்களுடைய சந்தோஷத்திற்காக நாட்டிய சாஸ்திரத்தை படைக்கும்படி கேட்டுக் கொண்டார். பிரம்மதேவன் ரிக் வேதத்தின் பாடலையும், ஸாமவேதத்தின் ராகத்தையும், யஜுர் வேதத்தின் நடிப்புத் திறனையும், அதர்வண வேதத்தின் ரசத்தையும் ஒன்றாகப் பிணைத்து நாட்டிய சாஸ்திரத்தை இயக்கினார் . பிரம்மதேவன் பரத முனிவருக்கு நாட்டிய சாஸ்திரத்தை கொடுத்தார் . பரத முனிவர் அபினவகுப்தா சமயத்தில் வெகு சிறப்பாக நாட்டிய சாஸ்திரத்தை மக்களிடம் பரப்பினார் . பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் காளிதாசரின் காவியங்களைப் படைத்தன . பரத முனிவரால் படைக்கப்பட்ட நாட்டிய சாஸ்திரம் இயல் , இசை , நாடகம், நடிப்பு ஆகிய பாவங்களை மக்களுக்கு தெரிய வைத்தது , மக்களுடைய உணர்வுகளை தட்டி எழுப்பியது .

பகவான் பதஞ்சலி

ஏசுநாதர் பிறப்பதற்கு முன்பு சுமார் இரண்டாம் நூற்றாண்டில் பிரம்மாண்டத்தில் யோகஞானம் மறைந்து விட்டது . பகவான் பதஞ்சலி யோகத்தை பற்றி பூலோகத்திற்கு அறிய வைத்தார் . பதஞ்சலி த்வாபர யுகத்தில் அங்கிரா கோனிகா தம்பதியருக்கு மகனாக பிறந்தார் . பதஞ்சலி இருவட்டு என்ற இடத்தில் பிறந்தார் . கோனிகா தினமும் குழந்தை வரத்திற்காக செப்புச் செம்புலிருந்து இரண்டு கைகளிலும் தண்ணீர் விட்டு சூரிய நமஸ்காரம் செய்து வந்தாள். ஒருநாள் சூரிய பகவான் அவளுடைய கைகளில் குழந்தையைக் கொடுத்தார் . சூரிய பகவானால் பெற்ற அந்தக் குழந்தைக்கு கோனிகா பதஞ்சலி என்று பெயர் வைத்தாள். பதஞ்சலி குழந்தைப் பருவத்திலேயே அளவுக்கு அப்பாற்ப்பட்ட அறிவுத் திறனை பெற்றிருந்தார் . சிறுவனாக இருந்தபோது கடுமையான தவம் செய்தார் . அவருடைய தவவலிமையை கண்டு மகிழ்ந்த சிவபெருமான் பிரம்மாண்டத்திற்கு மொழிகளின் இலக்கணத்தை அறிய வைக்கும் வரத்தை அவருக்கு கொடுத்தார் . அதன் பிறகு பகவான் பதஞ்சலி கோனார்த் என்ற இடத்தில் தஞ்சமடைந்தார். பகவான் பதஞ்சலியைப் பற்றி மற்றொரு வரலாறும் சொல்லப்படுகிறது . ஆசார்பனநி இரு கைகளாலும் தண்ணீர் விட்டு சூரிய பகவானை வேண்டிக் கொண்டிருந்த சமயத்தில் தீடீரென்று அவருடைய கைகளில் பாம்புக் குட்டியை போட்டார் . அந்தப் பாம்புக்குட்டி குழந்தையாகப் பிறந்தது . அந்தக் குழந்தைக்கு பனநி , பதஞ்சலி என்று பெயர் கொடுத்து நல்ல அறிவையும் , திறமையையும் கற்றுக் கொடுத்தார் . பதஞ்சலி சுமேரு மலையிலுள்ள குகையில் லோலூபாவை சந்தித்து திருமணம் செய்து கொண்டார் . லோலூபா நல்ல அறிவாளி, இசை ஞானம் தெரிந்தவள் . பகவான் பதஞ்சலி யோக சூத்திரம் என்ற நூலை இயற்றினார் .

கபில முனிவர்

கபில முனிவர் கடவுளால் படைக்கப்பட்ட சித்த சக்தி கொண்ட முனிவர். கபில முனிவர் மகாவிஷ்ணுவின் 24 அவதாரங்களில் ஒரு அவதாரமென்றும், அதுபோல வெவ்வேறு சூழ்நிலையில் கபிலமுனிவர் அக்னியின் அவதாரமாகவும், சிவபெருமானின் அவதாரமாகவும் தோன்றியிருக்கிறார் . பிரம்ம தேவனின் நிழலில் இருந்து உருவாகிய கர்தாம் என்பவருக்கும் அவருடைய மனைவி தேவயுவதிக்கும் கபிலர் மகனாக பிறந்தார் . மகன் பிறந்ததும் கர்தாம் தம்பதியர்கள் சித்தபுர் என்ற இடத்திலுள்ள ஆசிரமத்தில் தங்கினார் . கபிலர் பிறந்ததும் பிரம்மதேவன் கர்தாமுக்கு பகவானே ஜனனம் எடுத்ததாகச் சொன்னார் . மேலும் கபில முனிவர் சமக்கிய சாஸ்திரத்தை உருவாக்குவார் என்று பிரம்மதேவன் சொல்லிவிட்டு மறைந்தார் . கபிலமுனிவர் வளர வளர அவருடைய தந்தை சந்நியாசம் பெற்றுக் கொண்டு காட்டிற்கு சென்றார் . சில நாட்கள் கழித்து காட்டிலேயே கபிலரின் தந்தை உயிர் நீத்தார் . அதன்பிறகு கபில முனிவர் தன்னுடைய அன்னையுடன் சரஸ்வதி நதிக்கரை ஓரத்தில் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு தங்கினார் . ஒருநாள் பிரம்மதேவன் தோன்றி தேவயுவதியிடம், அவளுடைய மகன் கபில முனிவர் அவளிடம் அல்லது மக்களிடம் இருக்கும் அறியாமையை அழித்து தன்னிடமிருக்கும் ஞானத்தை எடுத்துரைப்பார் என்று சொல்லிவிட்டு மறைந்தார் . பிரம்மதேவன் கூறிய படியே கபில முனிவர் தியானம் செய்தார் . தன்னுடைய ஞானத்தின் மூலம் மக்களுடைய அறியாமையை அகற்றினார். இயற்கை, ஆதமா இரண்டும் ஒரு சக்தியால் பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை மக்களக்கு உணர்த்தினார் . தன்னுடைய ஞானத்தால் சமக்கிய சாஸ்திரத்தை படைத்தார் . கபில முனிவர் தாயினுடைய அனுமதியோடு கடுந்தவம் செய்ய கங்கையை தாண்டி காட்டுப் பகுதிக்குள் நுழைந்தார் . பின்பு கபில சூத்திரம் என்ற நூலையும் இயற்றினார் .

Thursday, July 1, 2010

மகரிஷி ததீச்சர்

அதர்வ ரிஷி, சிட்டி தம்பதியருக்கு ததீச்சர் மகனாக பிறந்தார் . அகஸ்தியரின் மனைவி லோபமுத்ராவின் சகோதரி காபஸ்தினியை மணந்து கொண்டார் . மகரிஷி ததீச்சர் பிரம்ம வித்யாவை இந்திரனிடமிருந்து கற்றுக் கொண்டார் . இந்திரன் ததீச்சருக்கு பிரம்ம வித்யாவை எவருக்கும் கற்றுக் கொடுக்கக் கூடாது என்று ஆணையிட்டார் . அஸ்வினி குமாரர்கள் ததீச்சரிடம் பிரம்ம வித்யாவை கற்றுக் கொடுக்குமாறு வேண்டினார்கள் .

ஒருவர் கேட்கும் போது கற்றுக் கொண்ட வித்யாவை சொல்லித் தராமலிருப்பது அதர்மத்துக்கு துணை செல்வதென்று ததீச்சர் கருதினார் . இந்திரனுடைய ஆணையை அறிந்த அஸ்வினி குமாரர்கள் ததீச்ச்சரின் தலையை எடுத்து அவருக்கு குதிரைத் தலையை பொருந்தினார்கள். அதன் பிறகு ததீச்சர் பிரம்ம வித்யாவை அஸ்வினி குமாரர்களுக்கு கற்றுக் கொடுத்தார் .

இதை அறிந்த இந்திரன் கோபம் கொண்டு ததீச்ச்சரின் குதிரை தலையை வெட்டி எறிந்தார் . அஸ்வினி குமாரர்கள் ததீச்சருக்கு மீண்டும் அவருடைய தலையை பொருந்தினார்கள் . இதனால் ததீச்சர் அஸ்வஹீரா என்று மற்றோரு பெயரால் அழைக்கப்படுகிறார் . மகரிஷி ததீச்சர் தகஷ் மகாராஜா நடத்தும் யாகத்திற்கு மருமகன் சிவபெருமானை அழைக்கும்படி அவரிடம் கேட்டுக் கொண்டார் . தகஷானோ மகரிஷியின் வேண்டுகோளை அவமதித்ததால் ததீச்சர் யாகத்தை விட்டு வெளியேறினார் .

இந்திரனுக்கும் பிரகஸ்பதிக்கும் மனபேதம் தோன்றியது . இதனை சாதகமாக எடுத்துக் கொண்டு அசுரர்கள் தேவர்களைத் தாக்கினார்கள் . அசுரர்களுக்கு பயந்து இந்திரன் பிரம்மனிடம் அடைக்கலமடைந்தார். அந்த அராஜகத்தை ஒழிக்க பிரம்மன் தவ்ஸ்தனின் மகன் விஸ்வரூபனை பூசாரியாக தோற்றுவித்து யாகத்தை நடத்தினார் . விஸ்வரூபனின் தாயார் அசுர பரம்பரையைச் சார்ந்தவர் .

விஸ்வரூபன் யாகத்தின் பிரசாதத்தை தாயாருக்கு கொடுத்தார் . விஸ்வரூபன் கொடுத்த பிரசாதத்தை அவனுடைய தாயார் சாப்பிட்டவுடன் அசுரர்களின் பலம் கூடியது . இதை அறிந்த இந்திரன் விஸ்வரூபனை கொன்றான் . மகன் இறந்த செய்தியை அறிந்த தவ்ஸ்தன் வரத்தா என்கிற அசுரனை உருவாக்கினார் . அவனுடைய கொடுமையை தாங்க முடியாமல் இந்திரன் பிரகஸ்பதியின் உதவியை நாடினார் . பிரகஸ்பதி ததீச்சரின் எலும்பினால் உருவாக்கப்பட்ட வஜ்ராயூதத்தால் அந்த அசுரன் கொல்லப்படுவான் என்ற பரிகாரத்தை சொன்னார் .

இந்திரன் ததீச்சரைத் தேடி நைமிசாரன்யத்திற்கு சென்றார் . இந்திரன் ததீச்சரிடம் அவருடைய எலும்பை தானமாக கேட்டார் . ததீச்சரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய இந்திரன் அவருடைய எலும்பை பெற்றுக் கொண்டார் . இந்திரன் ததீச்சரின் லும்பினால் வஜ்ரா யூதத்தை உருவாக்கி வரத்தா அசுரனைக் கொன்றார் .

Tuesday, June 1, 2010

மகரிஷி அகஸ்தியர்


பிரம்மரிஷி வசிஷ்டரும் , மகரிஷி அகஸ்தியரும் வருணபகவான் மூலமாக விழுந்த விதையிலிருந்து தோன்றினார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன . சாஸ்திரங்கள், வேதங்கள் , யோகா ஆகியவற்றில் திறமைசாலியான அகஸ்தியர் தர்மத்தைக் கடைப்பிடிப்பவர் என்று சொல்லலாம் . அகஸ்தியர் சிவபெருமானிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர். சிவபெருமானை நினைத்து தவமிருந்தார் . அகஸ்தியருடைய தவத்தைக் கண்டு மெச்சிய சிவபெருமான் அவர் முன் தோன்றி லிங்கமாக உறைந்தார் . இன்று மக்கள் அந்த சிவலிங்கத்தை அகஸ்தியேஸ்வர் என்று அழைக்கிறார்கள் .

மகரிஷி அகஸ்தியர் விஷ்வாமித்திரருக்கு சகல வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார். விதர்ப்ப நாட்டு இளவரசி லோபமுத்ராவை மணந்து கொண்டார். அழகையும் அறிவையும் கொண்ட லோபமுத்ரா அகஸ்தியர் தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அகஸ்தியர் லோபமுத்ரா தம்பதியர் குஞ்ச மலைத்தொடரை விட்டு தென் மாநிலத்தை நோக்கிப் பயணத்தை தொடர்ந்தார்கள் . அதன்பிறகு தெற்கு திசை ஆகாயத்தில் நட்சத்திரமாகத் தோன்றினார்கள் என்று புராணங்கள் சொல்லுகின்றன . அகஸ்தியரின் சிறப்பைப் பற்றி அகஸ்திய புராணம் சொல்கின்றது. தமிழ் இலக்கணத்தை கண்டெடுத்த தொல்காப்பியர் மகரிஷி அகஸ்தியரின் சிஷ்யன் என்று சொல்லலாம். அகஸ்தியர் இந்திரனுக்கும் மரூத்தனுக்கும் இடையே இருந்த மனபேதத்தை தீர்த்து வைத்தார். சமுத்திரத்திலிருந்து தோன்றிய காலன் என்ற அரக்கன் முனிவர்களையும், ரிஷிகளையும் கொன்று வந்தான். அகஸ்தியர் அரக்கனை அழிக்க சமுத்திரத்தையே விழுங்கினார். சூரியன், சந்திரன் சுற்றுகிற பாதையை மறைப்பதற்காக விந்திய பர்வதம் உயரமாக வளர்ந்தது . அகஸ்தியர் உயரமாக வளர்ந்த பர்வதத்தை சின்னதாக்கினார். மகரிஷி அகஸ்தியர் வாதபி என்ற அரக்கனை கொன்றார். இவரே வனவாசம் சென்ற ஸ்ரீராமருக்கு வில் , அம்பு மற்ற ஆயுதங்களையும் கொடுத்து வழி அனுப்பினார்.

Tuesday, May 18, 2010

பிரம்மரிஷி - வசிஷ்டர்

ஆதிவசிஷ்டரை பிரம்ம தேவரின் மனுபுத்திரன் என்று சொல்லுகிறார்கள் . முதலில் பிரம்மரிஷி வசிஷ்டர் பிரம்மதேவரின் மூச்சிலிருந்து தோன்றினார் . அடுத்து பிரம்மாவால் உருவாக்கப்பட்ட அக்னியிலிருந்து வசிஷ்டர் தோன்றினார் . மூன்றாவது முறையாக ஊர்வசியின் அழகில் மயங்கிய வருணபகவான் மூலமாக விழுந்த விதையிலிருந்து தோன்றினார் . வசிஷ்டர் , கர்தாம் என்பவரின் மகள், கபிலரின் சகோதரியுமான அருந்ததியை மணந்து கொண்டார் . கணவனையே உலகமென்று நினைத்து வாழ்பவளை அருந்ததி என்று அழைக்கலாம் . இத்தகைய நல்ல குணங்களைக் கொண்ட அருந்ததி வானத்தில் நட்சத்திரமாகத் திகழ்கிறாள் .
திருமணமான புதிய தம்பதியர்கள் சந்தோசமான வாழ்க்கையைத் தொடங்குவதற்கு அருந்ததி நட்சத்திரத்தைப் பார்ப்பது வழக்கமாகும் . வசிஷ்டருக்கும் நிமி அரசருக்கும் சிறிய வாக்குவாதம் நடந்தது . இதனால் வசிஷ்டர் சூரிய வம்சத்திலிருந்து விலகிக் கொண்டு இச்சவாகு வம்சத்தின் பூசாரிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். வசிஷ்டர் தசரத மகாராஜாவிற்கு புத்திரபாக்கிய யாகத்தை நடத்தி வைத்தார் . வசிஷ்டர் தசரதரின் முதல் புத்திரன் ஸ்ரீராமருக்கு குருவாக இருந்து சகல வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார் .
வசிஷ்டர் , விஷ்வாமித்திரருக்கு இடையே சிறிய போராட்டம் நடந்தது . வசிஷ்டர் வாயால் தன்னை பிரம்மரிஷி என்று அழைக்க வேண்டும் என்று விஷ்வாமித்திரர் ஆசைப்பட்டார் . விஷ்வாமித்திரர், ஆசையை நிறைவேற்றிக் கொள்ள நந்தினி பசுவையை நாடினார் . ஆனால் வசிஷ்டர் நந்தினியை ஆஸ்ரம யாகத்திற்காக அனுப்பி வைத்தார் . எதற்கும் மசியாத வசிஷ்டரை அழிக்க விஷவாமித்திரர் ஆயுதத்தோடு அவருடைய குடிசைக்கு இரவு வேளையில் நுழைந்தார் . அப்போது வசிஷ்டர் அருந்ததியிடம் விஷ்வாமித்திரரின் சிறப்பை சொல்லிக் கொண்டார் .
தன்மீது உயர்ந்த எண்ணத்தைக் கொண்ட வசிஷ்டரை அழிக்க நினைத்ததை எண்ணி மன வேதனைப்பட்டார் . உடனே வசிஷ்டரின் பாதங்களில் விழுந்தார் . வசிஷ்டரும் விஷ்வாமித்திரரை தழுவிக் கொண்டு அவரை பிரம்மரிஷி என்று அழைத்தார் . யோக வசிஷ்டர் ராமாயணம் , ஸ்ரீராமருக்கும் வசிஷ்டருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலை பற்றிச் சொல்லுகிறது . பிரம்மரிஷி வசிஷ்டரும் சப்த ரிஷிகளில் ஒருவராக கருதப் படுகிறார் .

Sunday, May 16, 2010

தேவரிஷி - நாரதர்


கையில் வீணை , நீண்ட சுருள்சுருளான முடி , சந்தனக் கட்டை காலணிகள் , எப்போதும் நாராயண நாமத்தை உச்சரிக்கும் தேவரிஷி நாரதரின் தோற்றத்தைப் பற்றி பல காவியங்களின் மூலம் படித்திருக்கிறோம் . தேவரிஷி நாரதர் முதலில் உபப்ரஹன் என்ற கந்தர்வராக பிறந்தார் .
உபப்ரஹன் உடைய தோற்றம் தேவலோகத்து அப்சரைகளின் அழகிய தோற்றம் போல இருந்தது . பிரம்மதேவர் தர்பாரில் அப்சரைகளின் இசை , நடன நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது . அந்த நிகழ்ச்சியில் உபப்ரஹனும் அப்சைரையாக மாறி அவர்களோடு இணைந்து நடனமாடினார் . இதை அறிந்த பிரம்மதேவர் கோபம் கொண்டு அடுத்த பிறவியில் கீழ்ஜாதியில் உபப்ரஹன் பிறவி எடுக்க வேண்டுமென்று சாபம் கொடுத்தார் . அடுத்த பிறவியில் உபப்ரஹன் ஏழையான வேலைக்காரக் குடும்பத்தில் பிறந்தார் .
ஐந்து வயதை அடைந்த அந்தக் குழந்தை பெற்றவரை மதித்து, ஏழ்மையில் இருந்தாலும் தன்னை நாடி வரும் துறவிகளுக்கும், சாதுக்களுக்கும் அன்போடு உணவளித்து உபசரித்தான் . சாதுக்களும் , துறவிகளும் மிச்சம் வைத்து விட்டுப்போன உணவை சாப்பிட்டான் . சிறுவனின் சேவையைக் கண்டு மெய்சிலிர்த்த சாதுக்கள் அவனுக்கு மந்திரத்தையும் , தியானத்தையும் கற்றுக் கொடுத்தார்கள் .
திடீரென்று அந்தச் சிறுவனின் தாயார் பாம்புக் கடியால் மரணம் அடைந்தாள் . தாயை இழந்த சிறுவன் ஊர் ஊராக அலைந்து திரிந்தான் . ஒருநாள் ஆலமரத்தடியில் அமர்ந்து சிறுவன் தியானத்திலிருந்த போது அவனுடைய மனதில் மகாவிஷ்ணு தோன்றித் தோன்றி மறைந்தார் . அந்தச் சிறுவனுக்கு பகவானை நேரில் காண வேண்டுமென்ற ஆசை பிறந்தது . அந்தச் சிறுவன் இப்பிறவியில் பகவானைப் பார்க்க முடியாது என்ற அசரீரியின் குரலைக் கேட்டான் . காலப்போக்கில் சிறுவனின் உடலில் இருந்து பிரிந்த ஆத்மா பிரம்மனுடன் கலந்து தேவரிஷி நாரதராக மூன்றாவது பிறவி எடுத்தார் .
நாரதர் இப்ருகு முனிவரின் மகள் லக்ஷ்மியை மகாவிஷ்ணுவிற்கு திருமண செய்து கொடுத்தார் . இந்தரனின் ஒப்புதலோடு ஊர்வசி புருவர் திருமணத்தை முடித்தார் . நாரதரின் தூண்டுகோலால் வால்மீகி ராமாயணத்தையும் , வியாசர் மகாபாரதத்தையும் படைத்தார்கள் . நாரதரின் உதவியால் துருவனும் , பிரகலாதனும் மேதைகள் ஆனார்கள் . நாரதரே , இந்திரன் , சந்திரன் , மகாவிஷ்ணு , சிவபெருமான் , தருமர் , ஸ்ரீராமர் , கிருஷ்ணபரமாத்மா ஆகியவர்களுக்கு வழிகாட்டியாகவும் , குருவாகவும் இருந்தார் . நாரதரை சாஸ்திரங்கள் , சுருதி , ஸ்ம்ரிதி , இதிகாசம் , புராணங்கள் , வேதங்கள் , இசை , பூகோளம் , கணிதம் , ஜோதிடம் , யோகா ஆகிய சகல வித்தைகளிலும் திறமைசாலி என்று சொல்லலாம் . நாரத புராணத்திலுள்ள நாரத பஞ்சராத்திரி , நாரதரின் சிறப்பைப் பற்றி சொல்லுகிறது . ராமாயணமும் , மகாபாரதமும் தேவரிஷி நாரதரின் பக்தி பெருமையைப் பற்றி சொல்கின்றன .