Friday, July 2, 2010
பகவான் பதஞ்சலி
ஏசுநாதர் பிறப்பதற்கு முன்பு சுமார் இரண்டாம் நூற்றாண்டில் பிரம்மாண்டத்தில் யோகஞானம் மறைந்து விட்டது . பகவான் பதஞ்சலி யோகத்தை பற்றி பூலோகத்திற்கு அறிய வைத்தார் . பதஞ்சலி த்வாபர யுகத்தில் அங்கிரா கோனிகா தம்பதியருக்கு மகனாக பிறந்தார் . பதஞ்சலி இருவட்டு என்ற இடத்தில் பிறந்தார் . கோனிகா தினமும் குழந்தை வரத்திற்காக செப்புச் செம்புலிருந்து இரண்டு கைகளிலும் தண்ணீர் விட்டு சூரிய நமஸ்காரம் செய்து வந்தாள். ஒருநாள் சூரிய பகவான் அவளுடைய கைகளில் குழந்தையைக் கொடுத்தார் . சூரிய பகவானால் பெற்ற அந்தக் குழந்தைக்கு கோனிகா பதஞ்சலி என்று பெயர் வைத்தாள். பதஞ்சலி குழந்தைப் பருவத்திலேயே அளவுக்கு அப்பாற்ப்பட்ட அறிவுத் திறனை பெற்றிருந்தார் . சிறுவனாக இருந்தபோது கடுமையான தவம் செய்தார் . அவருடைய தவவலிமையை கண்டு மகிழ்ந்த சிவபெருமான் பிரம்மாண்டத்திற்கு மொழிகளின் இலக்கணத்தை அறிய வைக்கும் வரத்தை அவருக்கு கொடுத்தார் . அதன் பிறகு பகவான் பதஞ்சலி கோனார்த் என்ற இடத்தில் தஞ்சமடைந்தார். பகவான் பதஞ்சலியைப் பற்றி மற்றொரு வரலாறும் சொல்லப்படுகிறது . ஆசார்ய பனநி இரு கைகளாலும் தண்ணீர் விட்டு சூரிய பகவானை வேண்டிக் கொண்டிருந்த சமயத்தில் தீடீரென்று அவருடைய கைகளில் பாம்புக் குட்டியை போட்டார் . அந்தப் பாம்புக்குட்டி குழந்தையாகப் பிறந்தது . அந்தக் குழந்தைக்கு பனநி , பதஞ்சலி என்று பெயர் கொடுத்து நல்ல அறிவையும் , திறமையையும் கற்றுக் கொடுத்தார் . பதஞ்சலி சுமேரு மலையிலுள்ள குகையில் லோலூபாவை சந்தித்து திருமணம் செய்து கொண்டார் . லோலூபா நல்ல அறிவாளி, இசை ஞானம் தெரிந்தவள் . பகவான் பதஞ்சலி யோக சூத்திரம் என்ற நூலை இயற்றினார் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment